நீ
வெறித்துக்கொண்டிருக்கும்
அதே வானம்தான்
என்னுடையதாகவுமிருக்கிறது.
உன் புன்னகையில்
ஒளிந்திருக்கும்
அதே மௌனம்தான்
என்னையும் இயக்குகிறது.
நம்மிருவரின்
கண்ணீர்ச்சுவையும்
வேறுவேறல்ல.
உயிர் வாழ்தலுக்கான
இரசியங்களையெல்லாம்
ஏழு மலைத்தாண்டி
ஏழு கடல் தாண்டி
யாரும் ஒளித்துவைத்திருக்கவில்லை.
அப்படியேயானாலும்
மருதத்திணைக்கும்
குறிஞ்சித்திணைக்கும்
தூரம் பெரிய தூரமில்லையே.!
இளைப்பாறுதலுக்கு முன்பாக
என் வானத்தில் நீயும்
உன் வானத்தில் நானும் கொஞ்சம் பறந்துகொள்ளலாம்